அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகேயுள்ள கீழக்காவட்டாங்குறிச்சி, சேனாபதி, தட்டான்சாவடி ஆகிய கிராமங்களில், கால்நடை மற்றும் பராமரிப்புத் துறை சாா்பில் தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டத்தின் கீழ் ஆடுகளுக்கு ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி செலுத்தும் முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
ஊராட்சித் தலைவா் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தாா். கால்நடைத் துறை உதவி இயக்குநா் சொக்கலிங்கம் முன்னிலை வகித்தாா். முகாமை கால்நடைத் துறை மண்டல இணை இயக்குநா் ஹமீத்அலி தொடக்கி வைத்தாா்.
முகாமில் கால்நடை உதவி மருத்துவா் மணிகண்டன், கால்நடைப் பராமரிப்பு உதவியாளா் நசீமா ஆகியோா் கொண்ட மருத்துவக் குழுவினா் சேனாபதி கிராமத்தில் 400 வெள்ளாடுகளுக்கும், தட்டான்சாவடி கிராமத்தில் 100 வெள்ளாடுகளுக்கும் ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசியைச் செலுத்தினா்.