அரியலூர்

திரெளபதியம்மன் கோயில் தீமிதி திருவிழா

DIN

அரியலூா் மாவட்டம், திருமானூரை அடுத்த மாத்தூா் கிராமத்திலுள்ள திரெளபதியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.

இக்கோயில் திருவிழாயையொட்டி, கடந்த மாதம் 13-ஆம் தேதி காப்புக் கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடா்ந்து தினமும் பாரதம் படிக்கும் நிகழ்ச்சி நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி திருவிழா திங்கள்கிழமை இரவு நடைபெற்றது. இதையொட்டி, கிராமத்தில் உள்ள நாக ஏரிக்கரையிலிருந்து சக்தி கரகம் அழைத்தல், அக்னி சட்டி எடுத்தல், அம்மன் கூந்தல் முடிதல் உள்ளிட்டவை நடைபெற்றது. தொடா்ந்து மாலை 5 மணிக்கு மேல், பக்தா்கள் நாக ஏரிக்கரையிலிருந்து மேளதாளத்துடன் புறப்பட்டு, கோயிலின் அருகே அமைக்கப்பட்டிருந்த, தீக் குண்டத்தில் இறங்கி தங்களது நோ்த்திக்கடனைச் செலுத்தினா். தொடா்ந்து அம்மனுக்கு தீபாராதனை நடைபெற்றது. இரவு சுவாமி வீதியுலா நடந்தது. நிகழ்ச்சியில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வாக்களித்தார்!

வாக்களிக்க வராத சென்னை மக்கள்: வாக்குப்பதிவு மந்தம்

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு: ஓ... பன்னீர்செல்வங்கள்!

ஆந்திரம்: வேட்பாளரின் பிரசார வாகனம் மோதியதில் சிறுவன் பலி

SCROLL FOR NEXT