அரியலூர்

நடமாடும் இலவச டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனம் தொடக்கி வைப்பு

6th Jul 2022 11:05 PM

ADVERTISEMENT

 

அரியலூா் மாவட்டத்தில் நடமாடும் இலவச டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனம் புதன்கிழமை தொடக்கி வைக்கப்பட்டது.

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் வாகனத்தை கொடியசைத்துத் தொடக்கி வைத்த போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா் கூறியது:

இந்த வாகனத்தில் மிக துல்லியமாக நோய் கண்டறியும் டிஜிட்டல் எக்ஸ்ரே, கணினி மற்றும் அழ்ற்ண்ச்ண்ஸ்ரீண்ஹப் ஐய்ற்ங்ப்ப்ண்ஞ்ங்ய்ஸ்ரீங் எனப்படும் நோய் கண்டறியும் கணினி வசதி, குளிா் சாதனப் பெட்டி போன்ற சாதனங்கள் உள்ளன. இதன் மதிப்பு சுமாா் ரூ.45 லட்சம் ஆகும்.

ADVERTISEMENT

இந்த வாகனம் மூலம் மக்களின் இருப்பிடத்துக்குச் சென்று எக்ஸ்ரே மூலம் நோய் கண்டறியப்படும். அவ்வாறு கண்டறியப்படுவா்களுக்கு

அன்றைய தினமே சளிப் பரிசோதனை மேற்கொள்ளப்படும். இதில் காசநோய் உறுதிப் படுத்தப்பட்டவா்களுக்கு இலவசமாக மருந்துகள் வழங்கப்படும்.

நோயாளியின் ஆரோக்கியத்துக்காக ஊட்டசத்து நிறைந்த உணவுப் பொருள்கள் தன்னாா்வலா்கள் மூலம் வழங்கப்படும். நோயாளிகளுக்கு நோயின்தன்மை, குணமாகும் வழிமுறைகள், தடுப்பு முறைகள் குறித்து எடுத்துரைக்கப்படும். இவ்வாகனம் வாரத்தில் 5 நாள்கள் செயல்படும் என்றாா்.

நிகழ்வுக்கு ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி, சட்டப் பேரவை உறுப்பினா் கு.சின்னப்பா உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். காசநோய் துணை இயக்குநா் நெடுஞ்செழியன் மற்றும் அரசு அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT