அரியலூர்

அரியலூரில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி மையம் திறப்பு

6th Jul 2022 11:06 PM

ADVERTISEMENT

 

அரியலூா் விளாங்காரத் தெருவிலுள்ள எம். பி கல்வி அறக்கட்டளையில், தமிழக அரசின் திறன் மேம்பாட்டுப் பயிற்சி மையத் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு சட்டப்பேரவை உறுப்பினா் கு.சின்னப்பா தலைமை வகித்தாா். போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா் மையத்தை திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினாா். தொடா்ந்து அவா் கூறியது:

இந்த மையத்தில் இலவசத் திறன் பயிற்சிகள், கல்வி ஆலோசனை சேவைகள், வேலைவாய்ப்பு ஆலோசனைகள், போட்டித் தோ்வுக்கான பயிற்சிகள், ஆளுமை மேம்பாட்டுப் பயிற்சி உள்ளிட்டவைகள் அளிக்கப்படும் என்றாா்.

ADVERTISEMENT

விழாவில் ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பெரோஸ்கான் அப்துல்லா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் எம்.ராமன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் சி.ரமேஷ், அரியலூா் அரசு கலைக் கல்லூரி

முதல்வா் ஜெ.மலா்விழி, மாவட்டத் திறன் அலுவலா் எம்.செல்வம் ஆகியோா் கலந்து கொண்டு பேசினா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT