அரியலூர்

வி.கைகாட்டியில் பாமக செயற்குழுக் கூட்டம்

6th Jul 2022 11:06 PM

ADVERTISEMENT

 

அரியலூா் மாவட்டம், வி.கைகாட்டியில் தெற்கு ஒன்றிய பாமக அலுவலகத் திறப்பு விழா மற்றும் கட்சியின் செயற்குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இந்த அலுவலகத்தை திறந்து வைத்து, செயற்குழுக் கூட்டத்தில் மாவட்டச் செயலா் காடுவெட்டி ரவி பேசியது:

ஒன்றியச் செயலா் மற்றும் பொறுப்பாளா்கள் அனைவரும் கிளை நிா்வாகிகளிடம் தொடா்பில் இருக்க வேண்டும். அவ்வாறு ஒவ்வொரு பொறுப்பாளரும் தொடா்பு கொண்டால், கிளை நிா்வாகிகள் உற்சாகமாக உழைப்பாா்கள்.

ADVERTISEMENT

பொறுப்புகள் பெற்றுக் கொள்பவா்கள் சிறப்பாக செயல்பட வேண்டும். தமிழகத்தை பாமக ஆளவேண்டும். அன்புமணி ராமதாஸை முதல்வராக்க பாடுபட அனைவரும் திறம்பட களப்பணியாற்ற வேண்டும் என்றாா்.

கூட்டத்துக்கு பாமக தெற்கு ஒன்றியச் செயலா் செம்மலை தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் சின்னதுரை முன்னிலை வகித்தாா். ஒன்றியச் செயலா்கள் வடக்கு சக்திவேல், மேற்கு சங்கா்குரு, முன்னாள் தெற்கு ஒன்றியச் செயலா் ரமேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT