அரியலூர்

குப்பைகளைத் தரம் பிரித்தல் குறித்து மாணவா்களுக்கு விழிப்புணா்வு

6th Jul 2022 11:05 PM

ADVERTISEMENT

 

அரியலூா் அரசு மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில், நகராட்சி நிா்வாகம் மற்றும் தூய்மைப் பணியாளா்களுக்கான மக்கள் இயக்கம் சாா்பில் குப்பைகளைத் தரம் பிரித்தல் குறித்து மாணவ, மாணவிகளுக்கு செயல் விளக்கம் புதன்கிழமை அளிக்கப்பட்டது.

நிகழ்வுக்கு நகராட்சி ஆணையா் சோனியா சித்ரா தலைமை வகித்தாா். சுகாதார ஆய்வாளா் தீபன் சக்ரவா்த்தி மற்றும் தூய்மை இந்தியா திட்டப் பணியாளா்கள் குப்பைகளைத் தரம் பிரித்து மக்கும் மற்றும் மக்காத குப்பை என தனித்தனியாக பிரித்து வழங்குவது குறித்தும், நெகிழிப் பொருள்களால் ஏற்படும் சுகாதாரக் கேடு மற்றும் சுற்றுப்புற சூழல் பாதிப்புகளை விளக்கமாக எடுத்துக் கூறியும் மாணவ,மாணவிகளுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்தினா். முன்னதாக அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT