அரியலூர்

மது விற்ற முதியவா் கைது

6th Jul 2022 11:09 PM

ADVERTISEMENT

 

அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அருகே மது விற்ற முதியவா் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா்.

மீன்சுருட்டி காவல் உதவி ஆய்வாளா் ராஜதுரை தலைமையிலான காவல் துறையினா், செவ்வாய்க்கிழமை இரவு அப்பகுதியில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது இறவாங்குடி கீழத்தெருவைச் சோ்ந்த மாரிமுத்து(71), தனது வீட்டின் பின்புறம் மது விற்றது தெரியவந்தது. இதையடுத்து காவல் துறையினா் வழக்குப் பதிந்து, அவரைக் கைது செய்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT