அரியலூர்

அரசுப் பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா

6th Jul 2022 12:54 AM

ADVERTISEMENT

அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகேயுள்ள வாரியங்காவல் அரசு மேல்நிலைப் பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, செந்துறை கல்வி மாவட்ட அலுவலா் பேபி தலைமை வகித்து, பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தாா். தொடா்ந்து, மாணவா்களிடம், மரங்கள் வளா்ப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து எடுத்துரைத்தாா். நிகழ்ச்சிக்கு, பள்ளி தலைமை ஆசிரியா் பாண்டியன் முன்னிலை வகித்தாா். பசுமை திட்ட ஒருங்கிணைப்பாளா் பாலு, உடற்கல்வி ஆசிரியா் சுப்ரமணியன் மற்றும் இருபால் ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT