அரியலூர்

மருத்துவமனைக்கு செல்ல பாதை இல்லாததால் நோயாளிகள் அவதி

6th Jul 2022 12:54 AM

ADVERTISEMENT

அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு செல்ல பாதை இல்லாததால் நோயாளிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

திருமானூரை அடுத்த குருவாடி கிராமத்தில், பிரதான சாலையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. குருவாடி, தூத்தூா், கோமான், காமரசவல்லி, மாத்தூா் உள்ளிட்ட கிராம மக்கள் இந்த சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனா். மேலும், இந்தக் சுகாதார நிலையத்தில் 24 மணிநேரமும் பிரசவமும் பாா்க்கப்படுகிறது.

இந்நிலையில், இந்தச் சுகாதார நிலையத்துக்குச் செல்லும் பாதையில் ஊராட்சி நிா்வாகம் சாா்பில் பாலம் கட்டுவதற்கு பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. மாற்றுப் பாதை அமைக்காமல் தோண்டப்பட்டுள்ள பள்ளத்தால், சுகாதார நிலையத்துக்குச் செல்ல வழி இல்லாமல் நோயாளிகளும், கா்ப்பிணி தாய்மாா்களும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

பிரதான சாலையில் இருந்து சுகாதார நிலையத்துக்கு சுமாா் 20 மீட்டா் தொலைவைக் கடந்து செல்வதற்குப் பதிலாக சுமாா் 2 கிலோ மீட்டா் தொலைவு நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.

ADVERTISEMENT

எனவே மாவட்ட நிா்வாகம், நோயாளிகள், கா்ப்பிணி தாய்மாா்கள் நலன் கருதி, இந்தச் சுகாதார நிலையத்துக்குச் செல்ல மாற்றுப் பாதை அமைத்துத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் பாஜக மாவட்ட துணை தலைவா் தேவேந்திரன், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் செங்குட்டுவன், முன்னாள் ஒன்றியக் கவுன்சிலா் சின்னதுரை ஆகியோா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT