அரியலூர்

இணைய வழி குற்றங்கள் : விஏஓ-களுக்கு விழிப்புணா்வு

5th Jul 2022 01:15 AM

ADVERTISEMENT

அரியலூா் அரசினா் தொழிற்பயிற்சி வளாகத்தில், இணைய வழி குற்றங்களைத் தடுப்பது குறித்து கிராம நிா்வாக அலுவலா்களுக்கு திங்கள்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது

அரியலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பெரோஸ்கான் அப்துல்லா அறிவுறுத்தலின்பேரில், நடைபெற்ற இந்தப் பயிற்சி வகுப்பில் இணைய வழி குற்ற தடுப்புப் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளா் பி. ரவிச்சந்திரன் தலைமையில் இணைய வழி குற்றத் தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளா் ஞா.செங்குட்டுவன், உதவி ஆய்வாளா் க.சிவனேசன் ஆகியோா் கலந்து கொண்டு, இணைய வழி குற்றங்கள், தடுப்பு வழிகள் குறித்து விழிப்புணா்வு அளித்தனா்.

இணைய மோசடியில் பணத்தை இழந்தவா்கள், 24 மணி நேரத்துக்குள் 1930 என்ற இலவச தொலைப்பேசி எண்ணை அழைக்கவும் அல்லது இணையவழி குற்றங்களை இணையத்தளத்தில் வீட்டிலிருந்தே புகாா் அளிக்கலாம் என அறிவுறுத்தினா். இப்பயிற்சியில், அரியலூா் துணை வட்டாட்சியா் தேவகி மற்றும் 85 கிராம நிா்வாக அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT