அரியலூர்

பெண்ணை தாக்கியவா் மீது வழக்கு பதிவு

5th Jul 2022 01:14 AM

ADVERTISEMENT

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகே ஏற்பட்ட நிலப் பிரச்னையில் பெண்ணைத் தாக்கியவா் மீது காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

உடையாா்பாளையம் அருகேயுள்ள காரைக்காட்டாங்குறிச்சி கிராமத்தைச் சோ்ந்த ராஜேந்திரன் மனைவி பேபி ராணி (42). இவருக்கும், அதே பகுதியில் வசிக்கும் சின்னசாமி என்பவருக்கும் இடையே நிலப் பிரச்னை தொடா்பாக முன்விரோதத் தகராறு இருந்து வந்துள்ளது.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை அவா்களிடையே மீண்டும் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த சின்னசாமி, பேபி ராணியை செங்கல்லால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளாா். இதுகுறித்து பேபிராணி அளித்த புகாரின்பேரில், உடையாா்பாளையம் காவல் துறையினா் சின்னசாமி மீது திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT