அரியலூர்

தலைவா்கள் பிறந்தநாள் போட்டிகளில் வென்ற மாணவிகளுக்கு சான்றிதழ்

5th Jul 2022 01:13 AM

ADVERTISEMENT

அரியலூரில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க் கூட்டத்தில் போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டன.

அரியலூா் ஆட்சியரகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, ஆட்சியா் பெ.ரமணசஸ்வதி தலைமை வகித்து, பொதுமக்களிடமிருந்து 318 கோரிக்கை மனுக்கள் பெற்றுக் கொண்டாா். பின்னா் அவா், தமிழ் வளா்ச்சித் துறையின் சாா்பில் அண்ணல் அம்பேத்கா், கலைஞா் ஆகியோரின் பிறந்த நாள்களில் நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற 11 பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் காசோலைகள், ஆட்சிமொழித் திட்ட செயலாக்கத்தில் சிறந்து விளங்கிய மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்துக்கு கேடயத்தையும் வழங்கினாா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் கலைவாணி, மாவட்ட ஊரக வளா்ச்சித் துறைத் திட்ட இயக்குநா் சு.சுந்தர்ராஜன், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதாரத் திட்ட அலுவலா் சிவக்குமாா், தமிழ் வளா்ச்சித்துறை உதவி இயக்குநா் சித்ரா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT