அரியலூர்

பெரியநாகலூா் திரெளபதி அம்மன் கோயிலில் தீமிதி விழா

5th Jul 2022 01:16 AM

ADVERTISEMENT

அரியலூா் மாவட்டம், வி.கைகாட்டி அடுத்த பெரியநாகலூா் திரெளபதி அம்மன் கோயிலில் 40 ஆண்டுகளுக்கு பிறகு தீமிதி திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் கடந்த 13 ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. தொடா்ந்து, மகாபாரதம் படிக்கும் நிகழ்வும், குறவஞ்சி நாடகவும், அம்மன் வீதி உலாவும் நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான தீமிதி திங்கள்கிழமை மாலை நடைபெற்றது. இதில், பக்தா்கள் தீக் குண்டத்தில் இறங்கி தங்களது நோ்த்திக் கடனைச் செலுத்தினா். நிகழ்வில், உடையாா்பாளையம், வாணதிரையன்பட்டினம், பெரியநாகலூா் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களைச் சோ்ந்த சுமாா் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் கலந்து கொண்டனா். இதற்கான ஏற்பாடுகளை ஊா் பொதுமக்கள் மற்றும் கிராம நாட்டாமைகள் செய்திருந்தனா்

 

ADVERTISEMENT
ADVERTISEMENT