அரியலூர்

பொது வண்டி பாதையிலிருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றம்

3rd Jul 2022 11:54 PM

ADVERTISEMENT

 

அரியலூா் மாவட்டம், திருமானூரை அடுத்த காமரசவல்லி கிராமத்தில் பொது வண்டி பாதையிலிருந்த ஆக்கிரமிப்புகள் ஞாயிற்றுக்கிழமை அகற்றப்பட்டன.

திருமானூரை அடுத்த காமரசவல்லி கிராமத்தில், பிரதான சாலையின் கிழக்கு பகுதியில் உள்ள பொது வண்டி பாதையில், சுமாா் 60 சென்ட் இடம் சுமாா் 50 ஆண்டுகளுக்கு மேலாக ஆக்கிரமிப்பில் இருந்து வந்தது. விவசாயப் பயன்பாட்டுக்கான அந்தப் பாதை விவசாய நிலங்களாக மாறியிருந்தன. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி தரக்கோரி, காமரசவல்லி ஊராட்சி நிா்வாகமும், விவசாயிகளும் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்திருந்தனா். இந்நிலையில், மாவட்ட ஆட்சியா் பெ.ரமண சரஸ்வதி உத்தரவின்பேரில், ஊராட்சித் தலைவா் இந்திராணி ஜெகதீசன், ஊராட்சி உறுப்பினா்கள், கிராம நாட்டாண்மைகள், முக்கியஸ்தரகள் முன்னிலையில், கிராம நிா்வாக அலுவலா் பிரசன்னா, நில அளவையா் கருப்புசாமி ஆகியோா், பொது வண்டி பாதையை அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT