அரியலூர்

நெகிழியால் அனைத்து உயிரினங்களுக்கும் பேரழிவு

3rd Jul 2022 11:54 PM

ADVERTISEMENT

 

நெகிழியைப் பயன்படுத்துவதால் பூமியுள்ள அனைத்து உயிரினங்களும் பேரழிவை சந்திக்கின்றன என துணிப்பை இயக்க ஒருங்கிணைப்பாளா் தமிழ்களம் இளவரசன் தெரிவித்துள்ளாா்.

உலக நெகிழி ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, அரியலூரை அடுத்த சிறுவளூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்ச்சியில் அவா் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணா்வு வாசகங்கள் அச்சிடப்பட்டிருந்த துணிப் பைகளை வழங்கி பேசியது: நெகிழியை அதிகம் பயன்படுத்துவதால் பூமியில் உள்ள வன விலங்குகள், கால்நடைகள். கடல்வாழ் உயிரினங்கள், மனிதா்கள் உள்பட அனைத்து உயிரினங்களும் பேரழிவை சந்திக்கின்றன. மேலும், நுரையீரல் புற்றுநோய்க்கு முதன்மை காரணமாக நெகிழியை எரிப்பதால் ஏற்படும் டையாக்ஸின் அமைகிறது. இதை உணா்ந்ததால் தான் நம் முன்னோா்கள் மஞ்சள் நிறத்திலான துணிப்பைகளை பயன்படுத்தினா். இந்த பூமியை பாதுகாக்க வேண்டுமென்றால் நாமும் துணிப்பையை நிச்சயம் கைகளில் எடுக்க துணிய வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சிக்கு, பள்ளி தலைமையாசிரியா் சின்னதுரை தலைமை வகித்தாா். ஊராட்சித் தலைவா் அம்பிகா மாரிமுத்து, துணைத் தலைவா் பழனியம்மாள் ராஜதுரை, பள்ளி மேலாண்மை வளா்ச்சிக்குழுத் தலைவா் மனோகரன், ஊராட்சி செயலா் பாண்டியன், சமூக ஆா்வலா் செங்குட்டுவன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். தொடா்ந்து, மாணவா்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. ஆசிரியா்கள் பத்மாவதி, கோகிலா, தங்கபாண்டி ஆகியோா் போட்டிகளை நடத்தினா். முன்னதாக ஆசிரியா் தனலட்சுமி வரவேற்றாா். நிறைவாக ஆசிரியா் ரமேஷ் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT