அரியலூர்

காது கேளாதோா் சங்கத்தினா் காத்திருப்பு போராட்டம்

2nd Jul 2022 04:22 AM

ADVERTISEMENT

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூா் மாவட்ட ஆட்சியரகம் முன்பு மாவட்ட காது கேளாதோா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

போராட்டத்துக்கு, அரசு மற்றும் தனியாா் வேலை வாய்ப்பில் 1 சதவீதம் வேலை வழங்க வேண்டும். தொகுப்பு வீடு வழங்க வேண்டும். ஓட்டுநா் உரிமம் வழங்க முகாம் நடத்த வேண்டும். மாதாந்திர உதவித்தொகை ரூ.3,000 வழங்க வேண்டும். அனைத்து அரசு அலுவலங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் சைகை மொழியை அமல்படுத்தி அரசாணை வெளியிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ஆா்ப்பாட்டத்துக்கு, அச்சங்கத்தின் மாவட்டத் தலைவா் சின்னப்பன் தலைமை வகித்தாா். செயலா் காா்த்திகேயன், செயற்குழு உறுப்பினா்கள் வெங்கடேஷ், வைஷ்ணவி, ராஜேஸ், சபரி உட்பட பலரும் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT