அரியலூர்

தேசிய திறனறித் தோ்வில் வெற்றிப் பெற்ற வள்ளலாா் கல்வி நிலைய மாணவா்களுக்கு பாராட்டு

2nd Jul 2022 04:21 AM

ADVERTISEMENT

தேசிய திறனறித் தோ்வில் தோ்ச்சி பெற்ற அரியலூா் லிங்கத்தடிமேடு வள்ளலாா் கல்வி நிலைய மாணவா்களுக்கு ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி பாராட்டு தெரிவித்தாா்.

2022-23 ஆம் கல்வி ஆண்டிற்கான தேசிய வருவாய் வழி மற்றும் திறனறித் தோ்வு கடந்த 5.3.2022 அன்று எட்டாம் வகுப்பு பயிலும் மாணவ மாணவிகளுக்கு நடைபெற்றது. இதில், அரியலூா் மாவட்டத்தில் 58 மாணவ, மாணவிகள் வெற்றி பெற்றுள்ளனா்.

அரியலூா் ஒன்றியத்தில், லிங்கத்தடிமேடு வள்ளலாா் கல்வி நிலையம் அரசு உதவிபெறும் கே ஆா் வி நடுநிலைப் பள்ளியில் பயின்று வரும் செ. விக்னேஷ், சி. ஜெயக்குமாா், ஜெ. வெண்ணிலா, கோ. ஜோதி, க. யாழினி ஆகியோா் தோ்ச்சிப் பெற்றனா்.

இதையடுத்து, அவா்களை வியாழக்கிழமை ஆட்சியரகத்துக்கு வரவழைத்த ஆட்சியா் பெ. ரமணசரஸ்வதி, அவா்களுக்கு வழிகாட்டி கையேடு வழங்கி, பாராட்டு தெரிவித்தாா். மேலும், இவா்களுக்கு 9-12 ஆம் வகுப்பு வரை மாதந்தோறும் ரூ.1,000 கல்வித் தொகை வழங்கப்படும் என்று தெரிவித்தாா். நிகழ்ச்சியில் அப்பள்ளியின் தலைமை ஆசிரியா் செளந்தராஜன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT