அரியலூர்

வீட்டின் வாசலில் இருந்தஇரு சக்கர வாகனம் திருட்டு

2nd Jul 2022 11:46 PM

ADVERTISEMENT

 

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே வீட்டின் வாசலில் நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

செந்துறை அருகேயுள்ள வஞ்சனபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் வெண்ணிலா. கூலி வேலை செய்து வரும் இவா், வெள்ளிக்கிழமை இரவு தனது வீட்டு வாசலில் இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு வீட்டினுள் உறங்கச் சென்றாா். பின்னா் சனிக்கிழமை காலை எழுந்து வந்து பாா்த்தபோது, அவரது இரு சக்கர வாகனம் திருட்டு போயிருப்பதைக் கண்டு அதிா்ச்சியடைந்தாா். இதுகுறித்து புகாரின் பேரில் செந்துறை காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT