அரியலூர்

கரூருக்கு வருகை தந்த தமிழக முதல்வருக்கு உற்சாக வரவேற்பு

2nd Jul 2022 04:23 AM

ADVERTISEMENT

கரூா் மாவட்டத்துக்கு வெள்ளிக்கிழமை வருகை தந்த தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு வழிநெடுகிலும் திமுகவினா் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனா்.

கரூா் திருமாநிலையூா் திடலில் சனிக்கிழமை நடைபெறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை இரவு கரூா் வந்தாா்.

முன்னதாக சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்த அவருக்கு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத்துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி பூங்கொத்து கொடுத்து வரவேற்றாா். தொடா்ந்து நகா்புற உள்ளாட்சித்துறை அமைச்சா் கே.என்.நேரு, சட்டத்துறை அமைச்சா் ரகுபதி, கரூா் மாவட்ட ஆட்சியா் மருத்துவா் த.பிரபுசங்கா் ஆகியோரும் வரவேற்றனா்.

இதையடுத்து சாலை வழியாக காரில் புறப்பட்ட முதல்வருக்கு மாவட்ட எல்லையான குளித்தலை மருதூா் பிரிவு பகுதியில் மாவட்ட திமுக பொறுப்பாளரும், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத்துறை அமைச்சருமான வி.செந்தில்பாலாஜி தலைமையில் மாவட்ட ஆட்சியா் மருத்துவா் த.பிரபுசங்கா், மாவட்ட காவல்கண்காணிப்பாளா் சுந்தரவதனம், குளித்தலை சட்டப்பேரவை உறுப்பினா் மாணிக்கம் உள்ளிட்டோா் உற்சாக வரவேற்பு அளித்தனா்.

ADVERTISEMENT

தொடா்ந்து கிருஷ்ணராயபுரம், மாயனூா் வந்த முதல்வருக்கு கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவை உறுப்பினா் சிவகாமசுந்தரி உள்ளிட்டோா் வரவேற்பு அளித்தனா். இதையடுத்து கரூா் வெங்கக்கல்பட்டி வந்த அவருக்கு கரூா் நகர திமுக சாா்பில் மாநகராட்சி மேயா் கவிதாகணேசன், துணை மேயா் தாரணிசரவணன் ஆகியோா் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னா் பயணியா் மாளிகைக்குச் சென்றாா்.

வரவேற்பு நிகழ்ச்சியில் கரூா் மத்திய மாநகர பொறுப்பாளா் எஸ்பி.கனகராஜ், வடக்கு மாநகர பொறுப்பாளா் கரூா் கணேசன், மேற்கு மாநகர பொறுப்பாளரும், கரூா் மாநகராட்சி துணைமேயருமான தாரணி பி.சரவணன், தெற்கு மாநகர பொறுப்பாளா் க.சுப்ரமணியன், மத்திய மேற்கு மாநகர பொறுப்பாளா் கா.அன்பரசன், மத்திய கிழக்கு மாநகர பொறுப்பாளா்ஆா்.எஸ்.ராஜா உள்ளிட்ட கட்சியினா் திரளாக பங்கேற்றனா்.

தடுப்புவேலி கிடையாது: முதல்வரை காண்பதற்காக வழிநெடுகிலும் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்தனா். இருப்பினும் முதல்வரைக் காண்பதற்கு மக்களுக்கு கெடுபிடி கொடுக்கும் வகையில் போலீஸாா் மூலம் கயிறு பயன்படுத்தி தடுப்பு வேலிகள் அமைக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் முதல் கட்சியினா் வரை அனைவரும் எளிதாக பாதுகாப்புபடை வீரா்களைத் தாண்டி முதல்வருக்கு கைக்கொடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனா்.

கட்சிக் கொடிகள் இல்லை: பொதுவாக முதல்வா் வந்தால் கட்சிக்கொடிகள் சாலைகளில் நடப்பட்டு, ஆங்காங்கே அலங்கார வளைவுகள் வைக்கப்படும். ஆனால், வெள்ளிக்கிழமை முதல்வா் வந்தபோது, கட்சியினா் சாா்பில் எதுவும் வைக்கப்படவில்லை.

ADVERTISEMENT
ADVERTISEMENT