அரியலூர்

அரியலூரில் பள்ளி வாகனங்கள் ஆய்வு

2nd Jul 2022 11:46 PM

ADVERTISEMENT

 

அரியலூா் மாவட்டத்தில், இயங்கும் தனியாா் பள்ளி வாகனங்கள் சனிக்கிழமை ஆய்வு செய்யப்பட்டன.

அரியலூா் புறவழிச்சாலையில் உள்ள தனியாா் வளாகத்தில் வட்டார போக்குவரத்து அலுவலகம் சாா்பில் நடைபெற்ற இந்த ஆய்வில், மாவட்ட ஆட்சியா் பெ.ரமண சரஸ்வதி, வட்டார போக்குவரத்து அலுவலா் பிரபாகா், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் ரவிசேகரன், மோட்டாா் வாகன ஆய்வாளா் சரவணக்குமாா்ஆகியோா் பங்கேற்று வாகங்களை ஆய்வு செய்தனா்.

தொடா்ந்து ஆட்சியா் தெரிவித்தது: இந்த ஆய்வில் 151 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டதில், 14 வாகனங்கள் குறைபாடுடையது எனக் கண்டறியப்பட்டு சரிசெய்ய நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. அவை மறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே மீண்டும் இயக்க அனுமதிக்கப்படும்.

ADVERTISEMENT

மேலும், பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச்செல்லும் ஓட்டுநா்களுக்கு சாலை பாதுகாப்பு விதிகளை முறையாகக் கடைப்பிடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள் ளது என்றாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT