அரியலூர்

பெண்களுக்கு எதிரானகுற்றங்கள் குறித்து விழிப்புணா்வு நிகழ்ச்சி

2nd Jul 2022 04:23 AM

ADVERTISEMENT

மலைக்கோவிலூா் ஊராட்சிக்குள்பட்ட பகுதிகளில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து அரவக்குறிச்சி காவல் துறையினா் வெள்ளிக்கிழமை விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொண்டனா்.

அரவக்குறிச்சி அருகே உள்ள மலைக்கோவிலூா் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சோ்ந்த பெண்கள் தினமும் கூலி வேலைக்கு சென்று வருகின்றனா். அவா்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்தும் விதமாக அரவக்குறிச்சி தலைமை காவலா் பிரியா மற்றும் பெண் காவலா் பேபி ஆகியோா் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்த விழிப்புணா்வை எடுத்துக் கூறினாா். மேலும், தாங்கள் பணிபுரியும் இடங்களில் எவ்வாறு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதையும், தொடுதல் குறித்த விளக்கங்களையும், குழந்தை திருமண தடுப்பு, போக்சோ சட்டம் குறித்த விளக்கங்களையும் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடைபெறும் இடங்களில் எவ்வாறு தங்களை பாதுகாத்துக் கொள்வது என்பதையும் விளக்கிக் கூறினா். இந்நிகழ்வில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT