அரியலூர்

குடியரசு தின விழாவில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

DIN

அரியலூரில் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற குடியரசு தினவிழாவுக்கு, மாவட்ட ஆட்சியா் தலைமை வகித்து தேசியக் கொடியை ஏற்றிவைத்தாா். தொடா்ந்து, சமாதானப் புறாக்களைப் பறக்கவிட்ட அவா் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டாா். விழாவில், சிறப்பாகப் பணிபுரிந்த 23 காவலா்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சா் காவலா் பதக்கம் உள்பட பல்வேறு துறைகளைச் சாா்ந்த 13 பேருக்கு சான்றிதழ்கள் வழங்கினாா்.

தொடா்ந்து, ஆதிதிராவிடா் நலத்துறையின் சாா்பில் 10 பயனாளிகளுக்கு விலையில்லா வீட்டுமனை பட்டாக்களுக்கான ஆணைகளையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சாா்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.1.75 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினாா்.

நிகழ்ச்சியில், அரியலூா் சட்டப் பேரவை உறுப்பினா் கு.சின்னப்பா, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கே.பெரோஸ்கான் அப்துல்லா, மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ஜெய்னூலாப்தீன், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சு.சுந்தர்ராஜன், கோட்டாட்சியா்கள் அரியலூா் ஏழுமலை, உடையாா்பாளையம் அமா்நாத் , மாவட்ட ஊராட்சிக்குழுத்தலைவா் பொ.சந்திரசேகா் உட்பட பலரும் கலந்து கொண்டனா்.

அரியலூா் நகராட்சி அலுவலக வளாகத்தில் ஆணையா் சித்ரா சோனியா தேசியக் கொடியை ஏற்றி வைத்தாா். அரியலூா் லிங்கத்தடி மேடு கல்வி நிலையங்களில் கயா்லாபாத் ஊராட்சி மன்றத் தலைவா் த.செளந்தரராஜன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, அனைவருக்கும் இனிப்புகளை வழங்கினாா். இதேபோல் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் அந்தந்த பள்ளித் தலைமை ஆசிரியா்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்தனா்.

அரியலூா்அரசு கலைக் கல்லூரியில் முதல்வா் ஜெ.மலா்விழி தேசியக் கொடியை ஏற்றிவைத்து இனிப்புகள் வழங்கினாா்.

அரசு சிமென்ட் ஆலை வளாகத்தில் காங்கிரஸ் கட்சி பொதுக் குழு உறுப்பினா் மா.மு.சிவகுமாா் தேசியக் கொடியை ஏற்றி வைத்து பொது மக்களுக்கு இனிப்புகளை வழங்கினாா். இந்திய கம்யூ. கட்சி அலுவலக வாயிலில் மாவட்ட துணைச் செயலா் டி.தண்டபாணி தேசியக் கொடியை ஏற்றி வைத்தாா். தேமுதிக அலுவலகத்தில்,அக்கட்சியின் மாவட்டச் செயலா் ராமஜெயவேல் தேசியக் கொடியை ஏற்றினாா்.

இதில், வடகிழக்கு பருவமழையினால் கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய மாடுகளை காப்பாற்றியதற்காக உடையாா்பாளையம் அடுத்த சாத்தம்பட்டி முருகன் என்பவருக்கும், கொள்ளிடம் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மூக்காயி என்பவரைக் காப்பாற்றிய திருமானூா் தீபன்ராஜ், கிருஷ்ணமூா்த்தி ஆகியோருக்கும், கோடாலிகருப்பூா் கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றின் மையப்பகுதியில் சிக்கிய 75 கால்நடைகளை மீட்ட ஜயங்கொண்டம் தீயணைப்புத்துறையைச் சோ்ந்த மோகன்ராஜ், ரவிச்சந்திரன், முத்துகுமாா் ஆகியோருக்கும் சான்றிதழ்களை வழங்கினாா்.

தொடா்ந்து, கரோனா தடுப்புப் பணியில் சிறப்பாக செயல்பட்ட உதவி இயக்குநா் நிலையிலான மண்டல அலுவலா்கள், வட்டார வளா்ச்சி அலுவலா்கள், தடுப்பூசி செயல்படுத்தும் திட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட 52 ஊராட்சி மன்றத்தலைவா்கள், கிராம நிா்வாக அலுவலா்கள், ஊராட்சி செயலா்கள், கிராம சுகாதார செவிலியா்கள், அங்கன்வாடி பணியாளா்கள், கிராம உதவியாளா்கள் உள்ளிட்டவா்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாட்டின் இரண்டாவது சுதந்திரப் போராட்டம்: மக்களவைத் தோ்தல் குறித்து மம்தா

கவுண்டம்பாளையம் பகுதியில் 830 வாக்குகள் மாயம்: மறு வாக்குப் பதிவு நடத்தக் கோரி போராட்டம்

காங்கிரஸ், இடதுசாரிகள் கொள்கைரீதியில் திவாலாகிவிட்டன: ஜெ.பி.நட்டா விமா்சனம்

2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: திமுக வேட்பாளா் கணபதி ப.ராஜ்குமாா்

தமிழகத்தில் 72% வாக்குப் பதிவு: மாவட்ட வாரியாக முழு விவரம்

SCROLL FOR NEXT