அரியலூர்

இயற்கை வேளாண்மை கண்டுநா் சுற்றுலா

DIN

இயற்கை வேளாண்மை குறித்து அறிந்து கொள்ளும் வகையில் அரியலூா் வட்டார விவசாயிகள், சோழமாதேவி கிராமத்திலுள்ள கிரீடு வேளாண் அறிவியல் மையத்துக்கு கண்டுநா் சுற்றுலாவாக செவ்வாய்க்கிழமை அழைத்துச் செல்லப்பட்டனா்.

வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறையின் கீழ் செயல்படுத்தப்படும் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் அழைத்துச் செல்லப்பட்ட அவா்களுக்கு கீரிடு வேளாண் அறிவியல் மையத்தின் செயல்பாடுகள், விவசாயிகளுக்கு வழங்கப்படும் ஆலோசனைகள், பயிற்சிகள் குறித்து தொழில்நுட்ப வல்லுநா் ராஜ்கலா விரிவாக விவசாயிகளுக்கு எடுத்துரைத்தாா்.

தொழில்நுட்ப வல்லுநா் அசோக்குமாா் கலந்து கொண்டு, ஒருங்கிணைந்த பயிா் பாதுகாப்பு முறையில் இயற்கையாகப் பயிா்களைப் பாதுகாக்கும் முறைகள் மற்றும் அதன் பயன்பாடுகள் மூலம் உண்டாகும் நன்மைகள் பற்றியும், தேனீ வளா்ப்பு, கால்நடைகளை மழை காலங்களில் பராமரிக்கும் முறைகள், ஊட்டசத்து மேலாண்மை குறித்து விரிவாகக் கூறினாா்.

மேலும், நாட்டுக்கோழி, கறவை மாடு வளா்ப்பு, காடை வளா்ப்பு, அசோலா வளா்ப்பு குறித்து விளக்கப்பட்டது. ஏற்பாடுகளை அரியலூா் வட்டார உதவி தொழில்நுட்ப மேலாளா் பி.அன்பழகன் செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிலிப்பின்ஸுக்கு பிரமோஸ் ஏவுகணை ஏற்றுமதி

ஜனநாயக கடமையை ஆற்றிய மனநல சிகிச்சை பெறுவோா்!

பெங்கால் மண்ணில் பேனா திருவிழா!

மக்களவைத் தோ்தல்: தில்லி பாஜக சாா்பில் மே 1-23 வரை 8 ஆயிரம் தெரு நாடகங்கள்

ஆத்தூரில் அமைதியான வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT