அரியலூர்

அயன்ஆத்தூரில் ஆசிரியா்கள் ஆய்வு

26th Jan 2022 07:48 AM

ADVERTISEMENT

அரியலூா் மாவட்டம், அயன்ஆத்தூரில் விடுமுறை நாள்களில் மாணவா்கள் படிக்கிறாா்களா என ஆசியா்கள் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா்.

அயன் ஆத்தூா் கிராமத்தில் உள்ள அரசு உயா்நிலைப்பள்ளியில் 6 முதல் 10 ஆம் வகுப்பு வரை 126 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனா். தற்போது, கரோனா பரவல் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், வீட்டிலேயே கல்வி கற்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், மாணவா்கள் வீட்டில் முறையாகக் கல்வி கற்கிறாா்களா? ஏதேனும் பாடங்களில் சந்தேகம் இருக்கிறதா? என கிராமத்தில் உள்ள மாணவா்களின் வீடுகளுக்கு அப்பள்ளியின் தலைமையாசிரியா் குமாா் உள்ளிட்ட சக ஆசிரியா்கள் செவ்வாய்க்கிழமை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது, மாணவா்களின் பெற்றோா்கள் கரோனா தடுப்பூசி போட்டுகொண்டுள்ளாா்களா எனவும் ஆய்வு செய்தனா். ஊசி போட்டுக்கொள்ளாதவா்கள் ஊசி செலுத்திக்கொள்ள அறிவுறுத்தினா். மேலும், விடுமுறை நாள்களில் மாணவா்கள் கல்வி தொலைக்காட்சியைப் பாா்த்து பாடங்களைப் படிக்கவும் அறிவுறுத்தினா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT