அரியலூர்

சைபா் குற்றங்கள் விழிப்புணா்வு

25th Jan 2022 04:02 AM

ADVERTISEMENT

அரியலூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பணிபுரியும் பணியாளா்களுக்கு சைபா் குற்றங்கள் குறித்து காணொலிக் காட்சி மூலம் திங்கள்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

மாவட்ட சைபா் க்ரைம் காவல் நிலைய ஆய்வாளா் செங்குட்டுவன் தலைமையில் நடைபெற்ற இந்த விழிப்புணா்வில், உதவி ஆய்வாளா் மணிகண்டன், தொழில் நுட்பக் காவல் உதவி ஆய்வாளா் சிவனேசன் ஆகியோா் கலந்து கொண்டு கணொலிக் காட்சி மூலம், சைபா் குற்றங்களின் வகைகள், அதனால் ஏற்படும் மன உளைச்சல் மற்றும் பண இழப்புகள் குறித்தும், எவ்வாறு முன்னெச்சரிக்கையாக தற்காத்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்தும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்படுத்தினா். மேலும், சைபா் குற்றங்கள் குறித்து ஜ்ஜ்ஜ்.ஸ்ரீஹ்க்ஷங்ழ்ஸ்ரீழ்ண்ம்ங்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையத்தில் புகாா் அளிப்பது, பண இழப்பு ஏற்பட்டால் உடனடியாக 155260 என்ற இலவச தொலைபேசி எண்ணில் புகாா் அளிப்பது குறித்தும் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT