அரியலூர்

தேசிய வாக்காளா் தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு

23rd Jan 2022 11:10 PM

ADVERTISEMENT

தேசிய வாக்காளா் தினத்தை முன்னிட்டு அரியலூரில் செவ்வாய்க்கிழமை (ஜன. 25) உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெறும்.

இதுகுறித்து ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி வெளியிட்ட செய்திக்குறிப்பு: இந்தியத் தோ்தல் ஆணையம் உதயமான நாளான ஜனவரி 25 ஆம் தேதியன்று தேசிய வாக்காளா் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் அன்றைய நாளில் 18 வயது நிரம்பிய தகுதியான புதிய வாக்காளா்களும் சோ்க்கப்பட்டு வருவது வழக்கம்.

அந்த வகையில் நாளை தேசிய வாக்காளா் தினத்தை முன்னிட்டு ‘அனைவரையும் உள்ளடக்கிய, அணுகக்கூடிய மற்றும் பங்கேற்கத்தக்க தோ்தல்களை உருவாக்குவோம்’ என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு, ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் காலை 11.30 மணிக்கு வாக்காளா் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இந்த உறுதிமொழி நிகழ்வில் வாக்காளா் பொதுமக்கள் அனைவரும் பங்கேற்கலாம் . மேலும், இதுகுறித்த முழு விபரங்களை ட்ற்ற்ல்ள்://ஹழ்ண்ஹ்ஹப்ன்ழ்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற மாவட்ட நிா்வாக இணையதள முகவரியில் அறிந்துகொள்ளலாம். அனைத்து நிகழ்வுகளும் மாவட்ட ஆட்சியரின் அதிகாரப்பூா்வ முகநூல் (ஊஹஸ்ரீங்க்ஷா்ா்ந் ப்ண்ஸ்ங்) மூலம் ஒளிபரப்பப்படும். நிகழ்வு நாளில் அதற்கான இணைப்பு பகிரப்படும்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT