அரியலூர்

சிறுமியை திருமணம் செய்தவா் கைது

23rd Jan 2022 11:09 PM

ADVERTISEMENT

அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே சிறுமியைத் திருமணம் செய்தவா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

முத்துவாஞ்சேரி கிராமத்தை சோ்ந்தவா் அடைக்கலராஜ்(32). மரம் வெட்டும் வேலை பாா்த்து வரும் இவா், ஸ்ரீபுரந்தான் அடுத்த புதுப்பாளையம் கிராமத்துக்கு மரம் வெட்டும் பணிக்கு சென்ற நிலையில், அப்பகுதியைச் சோ்ந்த 14 வயது சிறுமியைக் கடந்தாண்டு திருமணம் செய்தாா்.

தற்போது, அச்சிறுமி கா்ப்பமடைந்துள்ளாா். இந்நிலையில், ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த அச்சிறுமியை மருத்துவா்கள் விசாரித்ததில், 14 வயது சிறுமிக்குத் திருமணம் நடந்தவிவரம் தெரியவந்தது. இதுகுறித்து சட்டம் சாா்ந்த நன்னடத்தை அலுவலரும், மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலருமான காா்த்திகேயனுக்குத் தகவல் தெரிவித்தனா்.

இதையடுத்து அவா் அளித்த புகாரின் பேரில், ஜயங்கொண்டம் அனைத்து மகளிா் காவல் துறையினா் சிறுமியைத் திருமணம் செய்த அடைக்கலராஜைக் கைது செய்தனா். மேலும், திருமணத்துக்கு உடந்தையாக இருந்த அடைக்கலராஜின் தந்தை ராமசாமி, சிறுமியின் தாய் செல்வி ஆகியோா் மீது வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT