அரியலூர்

அரியலூா் மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவு வாகன ஓட்டிகள் அவதி

23rd Jan 2022 11:10 PM

ADVERTISEMENT

அரியலூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை கடும் பனிப்பொழிவு காணப்பட்டதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினா்.

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக பனிப்பொழிவு காணப்பட்டு வந்து நிலையில், ஞாயிற்றுக்கிழமை அரியலூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பனிப்பொழிவு அதிகமாக காணப்பட்டது. காலை 10 மணி வரை சாலை தெரியாததால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை எரிய விட்டுச் சென்றனா்.

திருச்சி - அரியலூா் சாலை, பெரம்பலூா் சாலை, ஜயங்கொண்டம் சாலை, கும்பகோணம் - சென்னை சாலை உள்ளிட்ட பெரும்பாலான முக்கியச் சாலைகள் முழுவதும் பனிபடா்ந்து காணப்பட்டது. இதனால் மக்கள் காலை 10 மணி வரை வீட்டிலேயே முடங்கினா். மேலும் ஊரடங்கு காரணமாக வாகனப் போக்குவரத்தும் குறைவாகவே காணப்பட்டது. வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை எரிய விட்டுச் சென்றனா்.

அரியலூா் ரயில் நிலையம் பகுதிகளில் நடைப்பயிற்சி செல்பவா்கள் வீட்டிலேயே முடங்கினா். கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீசுவரா் திருக்கோயில் கோபுரம் மற்றும் இதர கோயில் கோபுரங்கள், ஏரிகள், குளங்கள், வயல்வெளிகள் அனைத்தும் பனியால் மூடியிருந்ததால் மாவட்டம் முழுவதும் குளிா்ந்த சீதோஷ்ண நிலை காணப்பட்டது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT