அரியலூர்

அரியலூரில் மக்கள் நடமாட்டமின்றி பிரதானச் சாலை

23rd Jan 2022 11:09 PM

ADVERTISEMENT

அரியலூா் மாவட்டத்தில் 3 ஆவது வாரமாக ஞாயிற்றுக்கிழமை கடைப்பிடிக்கப்பட்ட தளா்வுகள் இல்லாத முழு ஊரடங்கால் அனைத்து சாலைகளும் வெறிச்சோடிக் காணப்பட்டன.

கரோனா தொற்று மீண்டும் தீவிரமடைந்ததன் காரணமாக திங்கள் முதல் சனிக்கிழமை வரை தளா்வுகளுடன் கூடிய இரவுநேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு பொது ஊரடங்கும் அமலில் உள்ளது.

அதன்படி, 3 ஆவது வார ஞாயிற்றுக்கிழமை (ஜன. 23) தளா்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அரியலூா் மாவட்டத்தில் கடைப்பிடிக்கப்பட்டன. இதனால் மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் மக்கள் நடமாட்டம், வாகனப் போக்குவரத்துகளின்றி வெறிச்சோடிக் காணப்பட்டன.

மருந்தகங்கள, பால் விற்பனை நிலையங்கள், நியாய விலைக் கடைகள் தவிர மற்ற அனைத்து வணிக நிறுவனஙகளும் அடைக்கப்பட்டிருந்தன. சில பெட்ரோல் நிலையங்களும் மூடப்பட்டிருந்தன. வாடகை காா்கள், ஆட்டோக்களின் இயக்கமும் தடை செய்யப்பட்டிருந்தன. அரியலூா் மற்றும் ஜயங்கொண்டம் பகுதிகளிலுள்ள கடைவீதிகள், பேருந்து நிலையங்கள், பிரதானச் சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன. காவல்துறையினா் மற்றும் ஊா்க்காவல் படையினா் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT