அரியலூர்

மாற்றுத்திறனாளிகளுக்கான முகாம் ஒத்திவைப்பு

DIN

அரியலூரில் நடைபெற்றுவரும் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கிடும் முகாம் ஒத்திவைக்கப்படுவதாக ஆட்சியா் பெ. ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: அரியலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில், மாதத்தின் முதல் மற்றும் மூன்றாம் வியாழக்கிழமைகளில் மருத்துவா்கள் மூலம் நடைபெற்று வந்த மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம் ஒமைக்ரான் மற்றும் கரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுகிறது. மேலும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொது மக்கள் அனைவரும் அரசு விதிமுறைகளைப் பின்பற்றி நோய்த் தொற்றிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் வகையில் முகக்கவசம் அணிந்து தங்களைத் தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

‘அரண்மனை 4’ வெளியீட்டுத் தேதி மாற்றம்!

தோல்வியிலும் ரசிகர்களின் இதயங்களை வென்ற பஞ்சாப் வீரர்!

இந்தியாவுக்கு வெற்றிதான்: முதல்வர் ஸ்டாலின்

தஞ்சையில் முக்கிய பிரமுகர்கள் வாக்களிப்பு!

SCROLL FOR NEXT