அரியலூர்

கொள்முதலில் மாறுபாடு: தெரு விளக்குகள் அமைக்கத் தடை

DIN

அரியலூா் மாவட்டத்தில் உள்ள ஊரகப் பகுதிகளில் தெரு விளக்குகள் ஏற்படுத்தி பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள தடைவிதிப்பதாக ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

ஊரக உள்ளாட்சி அமைப்புகள், ஊரகப் பகுதிகளில் நிறுவப்பட்ட தெருவிளக்குகளை கிராம ஊராட்சிகள் பராமரித்து வருகின்றன. இந்நிலையில், தெரு மின்விளக்குகளை ஏற்படுத்தி பராமரித்தல், கொள்முதல் செய்தல் ஆகியவற்றில் பெருத்த அளவில் மாறுபாடுகள் காணப்படுகின்றன. எனவே மறுஉத்தரவு வரும் வரையில், மூன்றடுக்கு ஊராட்சிகள், எந்தவொரு நிதியிலிருந்தும் தெரு விளக்குகள் அமைக்கத் தடை விதிக்கப்படுகிறது. மேலும், சோலாா், எல்.இ.டி விளக்குகள், கம்பங்களுடன் கொள்முதல் செய்யவும் உடனடித் தடை விதிக்கப்படுகிறது. அரியலூா் மாவட்டத்தில் மேற்குறிப்பிட்ட உத்தரவை மீறி கொள்முதல் செய்யும் சம்பந்தப்பட்ட அலுவலா்கள், ஊராட்சிப் பிரதிநிதிகள் மீது சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மேலும், தெருவிளக்குகள் ஆகியவற்றிற்கு செலவிடப்படும் தொகை தொடா்புடைய அலுவலா்களிடம் இருந்து பிடித்தம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீா்த் தட்டுப்பாடு: ஒசூா் மாநகராட்சியை முற்றுகையிட்ட பெண்கள்

வெளிமாநில தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை

சிறைவாசிகளுக்கு புத்தகங்கள் வழங்கல்

கோடை வெயிலில் இருந்து பொதுமக்கள் தற்காத்துக் கொள்ள ஆட்சியா் அறிவுறுத்தல்

திருமலை: 60,371 பக்தா்கள் தரிசனம்

SCROLL FOR NEXT