அரியலூரில் காவல் துறையினா் சாா்பில் சாலைப் பாதுகாப்பு குறித்து வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணா்வு திங்கள்கிழமை ஏற்படுத்தப்பட்டது.
அரியலூா் அண்ணா சிலை அருகே வந்த வாகன ஓட்டிகளிடம், ரோந்து வாகன காவல் உதவி ஆய்வாளா் சுந்தரமூா்த்தி தலைமையிலான காவல் துறையினா் சாலைப் பாதுகாப்பு மற்றும் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை குறித்து விளக்கி விழிப்புணா்வை ஏற்படுத்தினா். மேலும் முகக் கவசம் அணியாமல் வந்தவா்களுக்கு முகக் கவசங்களையும் வழங்கினா்.