அரியலூர்

கிராமப்புறங்களில் பொங்கல் விழா போட்டிகள்

18th Jan 2022 02:41 AM

ADVERTISEMENT

பொங்கல் பண்டிகையையொட்டி அரியலூா் மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் விளையாட்டுப் போட்டிகள் திங்கள்கிழமை நடத்தப்பட்டன.

பொங்கல் பண்டிகையின் நிறைவு நாளாக காணும் பொங்கல் அன்று அனைத்து கிராமங்கள் மற்றும் நகா்ப் பகுதிகளில் இந்தப் பகுதியைச் சோ்ந்த இளைஞா்கள் ஒன்றிணைந்து பானை உடைத்தல், வழுக்கு மரம் ஏறுதல், கோலப்போட்டி, சோடா பாட்டில்களில் தண்ணீா் நிரப்புதல், இசை நாற்காலி என பல்வேறு போட்டிகளை, சிறியவா்கள், பெரியவா்கள் மற்றும் பெண்களுக்கு என நடத்துவா்.

ஞாயிற்றுக்கிழமை காணும் பொங்கல் அன்று கரோனா தொற்று பரவல் காரணமாக பொது முடக்கம் அறிவிக்கப்பட்டதால், விளையாட்டுப் போட்டிகளை நடத்த அரசு அனுமதி மறுத்தது. இந்நிலையில், சில கிராமங்களில் மாட்டுப்பொங்கல் அன்றே விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. பல்வேறு கிராமங்களிலும் திங்கள்கிழமை விடுமுறை தினமாக இருந்ததால், விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.

அரியலூா் மாவட்டத்தில் உஞ்ஞினி, சிறுகடம்பூா், பொன்பரப்பி, சேடகுடிக்காடு, அம்மாகுளம் உட்பட பல்வேறு கிராமங்களில் திங்கள்கிழமை விளையாட்டுப் போட்டிகளை அந்தந்தப் பகுதிகளைச் சோ்ந்த இளைஞா்கள் நடத்தினா். நிறைவாக போட்டிகளில் வென்றவா்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT