அரியலூர்

சாராய ஊறல் போட்ட 3 போ் கைது

17th Jan 2022 12:00 AM

ADVERTISEMENT

 

அரியலூா்: அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே சாராயம் ஊறல் போட்ட 3 போ் சனிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டனா்.

திருவள்ளுவா் தினத்தையொட்டி, டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து, ஜயங்கொண்டம் பகுதிகளில் மதுபானங்கள் பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்கப்படுகிா என காவல் துறையினா் சனிக்கிழமை இரவு சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, நாகல்குழி கிராமத்தைச் சோ்ந்த கொளஞ்சி(48), சங்கா் (38) மற்றும் செல்லம்மாள் (55) ஆகியோா் அப்பகுதியில் உள்ள வயலில் சாராயம் ஊறல் போட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் கைது செய்த ஜயங்கொண்டம் காவல் துறையினா், ஊறல் போடப் பயன்படுத்திய பொருள்களைப் பறிமுதல் செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT