அரியலூர்

அரசுப் பள்ளி முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

16th Jan 2022 12:58 AM

ADVERTISEMENT

அரியலூா் மாவட்டம், செந்துறை அடுத்த பொன்பரப்பி கிராமத்திலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 1998 ஆம் ஆண்டு பயின்ற முன்னாள் மாணவா்கள் மற்றும் கற்பித்த ஆசிரியா்கள் சந்திப்பு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

பள்ளித் தலைமை ஆசிரியா் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் பெருமாள், முதுகலை ஆசிரியா்கள் முருகேசன், சுப்பிரமணியன், ராஜேந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்து பேசினா்.

நிகழ்ச்சியில், இப்பள்ளியில் 1998 ஆண்டு பயின்ற முன்னாள் மாணவரும், திருப்பூா் நீதிமன்ற நீதிபதி புகழேந்தி, சென்னை உயா்நீதிமன்ற வழக்குரைஞா் தங்கதுரை, காவல் உதவி ஆய்வாளா் சாந்தி, பட்டதாரி ஆசிரியா் அசோகன், வழக்குரைஞா் காரல்மாா்கஸ், மருவத்தூா் மணிவண்ணன் உள்ளிட்ட 75-க்கும் மேற்பட்டோா் ஒருவருக்கொருவா் சந்தித்து, தங்களது பழைய சம்பவங்களை நினைவு கூா்ந்தனா். தொடா்ந்து அவா்கள், பள்ளியைத் தூய்மைப் படுத்தி, தலைமை ஆசிரியா் அலுவலக கட்டடத்துக்கு வா்ணம் பூசி அழகுபடுத்தி, பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தனா். முன்னதாக அவா்கள், கற்பித்த ஆசிரியா்களை வரவழைத்து அவா்களுக்கு பொன்னாடை போா்த்தி கெளரவித்தனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT