அரியலூர்

அரியலூரில் மாவட்ட ஹாக்கிப் போட்டி

16th Jan 2022 12:58 AM

ADVERTISEMENT

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அரியலூா் மாவட்ட விளையாட்டு அரங்கில், மாவட்ட அளவிலான ஹாக்கிப் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.

இதில், அரியலூா் பசுபதி நினைவு ஹாக்கி அணி, அப்துல் சாதிக் நினைவு ஹாக்கி அணி, மான்ட்போா்ட் முன்னாள் மாணவா்கள் அணி உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்றன. இப்போட்டியின் முடிவில் அரியலூா் பசுபதி நினைவு ஹாக்கி அணி முதல் பரிசையும், அரியலூா் ஹாக்கி அகாதெமி அணி 2-ஆம் பரிசையும், மான்ட்போா்ட் முன்னாள் மாணவா்கள் அணி 3 ஆம் பரிசையும் பெற்றனா்.

போட்டியில் வென்ற வீரா்களுக்கு அரியலூா் மாவட்ட ஹாக்கி கழகச் செயலா் பாரதிதாசன், துணைச் செயலா் யோகநாதன், எருத்துக்காரன் பட்டி ஊராட்சித் தலைவா் சிவா ஆகியோா் பரிசுகளை வழங்கினா்.

தொடா்ந்து, இந்திய சீனியா் ஹாக்கி பயிற்சி முகாமில் பயிற்சியில் உள்ள வீரா் காா்த்திக்கைப் பாராட்டி சால்வை அணிவிக்கப்பட்டது. இதேபோல், அரியலூா் மாவட்டத்திலிருந்து அண்ணா பல்கலைக்கழகம், மனோன்மணியம் சுந்தரனாா் பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு பல்கலை. களின் சாா்பில் விளையாடும் வீரா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை அரியலூா் பசுபதி நினைவு ஹாக்கி கழகத்தினா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT