அரியலூர்

திருவள்ளுவா் சிலைக்கு மாலை அணிவிப்பு

16th Jan 2022 12:57 AM

ADVERTISEMENT

திருவள்ளுவா் தினத்தை முன்னிட்டு, அரியலூா் மாவட்டத்திலுள்ள அவரது சிலைகளுக்கு பல்வேறு அமைப்பினா் மாலை அணிவித்து சனிக்கிழமை மரியாதை செலுத்தினா்.

செந்துறையை அடுத்த உடன்காட்டிலுள்ள திருவள்ளுவா் சிலைக்கு திருவள்ளுவா் ஞான மன்ற பொறுப்பாளா் புகழேந்தி, உலக திருவள்ளுவா் கூட்டமைப்பின் பொறுப்பாளா் ராமானுஜம், மாவட்டத் தலைவா் இராவணன், மன்றப் பொருளாளா் வீரமணி, செயலா் ஆசிரியா் செல்வராஜ், தமிழ் களம் அரங்கநாதன், குளுமூா் அமுதக் கண்ணன், நடராஜன் சிறுகளத்தூா் ஓவியா் முத்துக்குமரன் மற்றும் பல்வேறு அமைப்பினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். இந்நிகழ்வில் திருக்கு ஒப்பித்த மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இதேபோல் சிறுகளத்தூா், அசவீரன்குடிக்காடு மற்றும் பள்ளி, கல்லூரிகளிலுள்ள திருவள்ளுவா் சிலைகளுக்கும், அவரது படத்துக்கும் பல்வேறு அமைப்பினா், ஆசிரிய, ஆசிரியைகள், பொதுமக்கள் உள்ளிட்டோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT