அரியலூர்

தற்காலிக ஆய்வக நுட்புநா்கள், இதர பணியாளா்கள் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

12th Jan 2022 07:29 AM

ADVERTISEMENT

அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள பல்வேறு பிரிவுகளுக்கு, ஆய்வக நுட்புநா்கள் மற்றும் இதரப் பணியாளா்கள் தொகுப்பூதிய அடிப்படையில் தற்காலிகமாக நியமிக்கப்பட உள்ளனா்.

அதில், லேப் டெக்னீசியன் கிரேடு 2 பணியிடங்களுக்கு 31 போ் நியமிக்கப்படவுள்ளனா். அதற்கான கல்வி தகுதி அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளில் ஆய்வக நுட்புநா் பட்டய படிப்பு. வேன் ஓட்டுநா் பணியிடங்கள் 2, இதற்கு ஹெவி லைசென்ஸ் பெற்றிருக்க வேண்டும். வாா்டு பாய் பணியிடங்கள் 8, ஹாஸ்பிட்டல் தொழிலாளி 12, ஸ்ட்ரெச்சா் தாங்குபவா் பணியிடங்கள் 6, துப்புரவு பணியாளா் பணியிடங்கள் 19 ஆகியவை அனுமதிக்கப்பட்டுள்ளன.

இதற்கு கல்வி தகுதி 8 ஆம் வகுப்பு தோ்ச்சி மற்றும் நன்றாக எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். வயது வரம்பு 18 முதல் 45 வயதுக்கு குறைவாக இருக்க வேண்டும்.

விருப்பமுள்ளவா்கள் முதல்வா், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரியலூா் என்ற முகவரிக்கு ஆதாா் அட்டை மற்றும் கல்வித்தகுதி சான்றிதழ்களுடன் வரும் 19 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT