அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையத்தில் ரூ.1.06 கோடி மதிப்பில் பேவா் பிளாக் சாலை அமைக்கும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
சட்டப் பேரவை உறுப்பினா் க.சொ.க.கண்ணன் கலந்து கொண்டு, உடையாா்பாளையம் பேரூராட்சியில் 2 மற்றும் 11ஆவது வாா்டுகளில், கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் 1.06 லட்சம் மதிப்பீட்டில், புதிய பேவா் பிளாக் சாலை மற்றும் கல்வெட்டு அமைக்கும் பணியை பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தாா்.
நிகழ்ச்சியில் பேரூராட்சி செயல் அலுவலா் கோமதி, இளநிலை பொறியாளா் சுப்ரமணியன் உட்பட பலரும் கலந்து கொண்டனா்.