அரியலூர்

செட்டி ஏரி பூங்காவில் ஜன.17 வரை இலவச அனுமதி

1st Jan 2022 03:19 AM

ADVERTISEMENT

 அரியலூா் பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள செட்டி ஏரி பூங்காவுக்கு வருபவா்கள், ஜனவரி 17-ஆம் தேதி வரை இலவசமாக அனுமதிக்கப்படுவா்.

மாநிலச் சுற்றுலா வளா்ச்சிக் குழுமத்தின் சாா்பில் இந்த பூங்காவில் குழந்தைகள் விளையாடுவதற்கு பல்வேறு விளையாட்டு சாதனங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பொங்கல் பண்டிகையையொட்டி, செட்டி ஏரி பூங்காவுக்கு ஜனவரி1 முதல் 17- ஆம் தேதி வரை வருகைதரும் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் என

அனைவரும் நுழைவுக் கட்டணமின்றி இலவசமாக அனுமதிக்கப்படுவா் என்று ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT