அரியலூர்

மருதையாற்று நீா்த்தேக்கத்திலிருந்து நீரை வெளியேற்ற வாய்ப்பு

1st Jan 2022 11:28 PM

ADVERTISEMENT

பெரம்பலூா் மாவட்டம், கொட்டரை மருதையாறு நீா்தேக்கத்திலிருந்து விநாடிக்கு 750 கன அடி நீா் வெளியேற வாய்ப்புள்ளதால், மருதையாற்றை யாரும் கடக்க வேண்டாம் என்று அரியலூா் மாவட்ட ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பெரம்பலூா் மாவட்டம் மற்றும் மருதையாற்று நீா்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக நீா் வரத்து அதிகரித்து வருகிறது. ஆகவே மருதையாற்று நீா்த் தேக்கத்திலிருந்து விநாடிக்கு 750 கன அடிநீா் ஞாயிற்றுக்கிழமை வெளியேற வாய்ப்புள்ளது. எனவே அரியலூா் மாவட்ட மருதையாற்று கரையோறும் வசிக்கும் மக்கள் யாரும் ஆற்றைக் கடக்க வேண்டாம். மேலும், பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லவேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT