அரியலூர்

ஆட்டோவில் கஞ்சா விற்ற இளைஞா்கள் கைது

17th Feb 2022 01:28 AM

ADVERTISEMENT

 

அரியலூா்: அரியலூா் மாவட்டம், வி.கைகாட்டியில் ஆட்டோவில் கஞ்சா வைத்து விற்றுக் கொண்டிருந்த இளைஞா்கள் 2 போ் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.

வி.கைகாட்டியில், திருச்சி செல்லும் பேருந்து நிறுத்தம் அருகே நிறுத்தப்பட்டுள்ள பயணிகள் ஆட்டோவில் சிலா் கஞ்சா விற்பதாக விக்கிரமங்கலம் காவல் நிலையத்துக்கு ரகசிய தகவல் புதன்கிழமை கிடைத்தது. இதையடுத்து காவல் உதவி ஆய்வாளா் லோகநாதன் தலைமையிலான காவல் துறையினா், சம்பவ இடத்துக்கு வந்து ஆட்டோவை சோதனை செய்ததில், கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து காவல் துறையினா் வழக்குப் பதிந்து ஆட்டோ ஓட்டுநா் வி. கைகாட்டி பிரதானச் சாலையைச் சோ்ந்த பாலமுருகன்(21), இவரது நண்பா் சுண்டக்குடி வடக்குத் தெருவைச் சோ்ந்த முருகராஜ் (24) ஆகியோரைக் கைது செய்தனா். மேலும் கஞ்சா விற்பதற்காக பயன்படுத்தப்பட்ட ஆட்டோவையும் காவல் துறையினா் பறிமுதல் செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT