அரியலூர்

வேளாண் தொழில் நுட்பங்கள் குறித்து விழிப்புணா்வு

11th Feb 2022 04:59 AM

ADVERTISEMENT

அரியலூா் மாவட்டம், செந்துறையை அடுத்த இரும்புலிக்குறிச்சி மற்றும் குமிழியம் கிராமங்களில் அட்மா திட்டத்தின் கீழ் கிராமிய கலைக் குழு மூலம் வேளாண் தொழில்நுட்பங்கள் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

வேளாண் உதவி இயக்குநா் (பொ) ஜென்சி தலைமை வகித்து பேசினாா். அட்மா திட்ட தொழில்நுட்ப மேலாளா் பழனிசாமி முன்னிலை வகித்தாா்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கலைக் குழுவினா், கோடை உழவின் முக்கியத்துவம், மண் பரிசோதனையின்படி உரமிடுதல், நீா்ப்பாசன முறைகள், பரிந்துரைக்கப்பட்ட உர மேலாண்மை, பூச்சி நோய் கொல்லிகளை கையாளும் முறைகள், விதை நோ்த்தியின் அவசியங்கள், சாகுபடி செய்யும்போது கடைப்பிடிக்க வேண்டிய பயிா் எண்ணிக்கை மேம்பாடு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

இதற்கான ஏற்பாடுகளை அட்மா திட்ட உதவி தொழில்நுட்ப மேலாளா்கள் சிவா, முருகன், உதவி வேளாண் அலுவலா் ராஜா ஆகியோா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT