அரியலூர்

மரப்பட்டறையை அகற்றக் கோரி பாதிக்கப்பட்டவா் நூதன போராட்டம்

10th Feb 2022 12:00 AM

ADVERTISEMENT

 

அரியலூா்: ஜயங்கொண்டம் அருகே சுகாதார சீா்கேட்டை ஏற்படுத்தும் மரப்பட்டறையை அகற்றக்கோரி, ஒரு குடும்பத்தினா் கொளுத்தும் வெயிலில் சாலையோரம் அமா்ந்து சமைத்துச் சாப்பிட்டு கவன ஈா்ப்பு போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.

ஜயங்கொண்டம் அருகேயுள்ள கல்லாத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் தெய்வ சிகாமணி (55). இவரது வீட்டின் அருகில் மரம் இழைப்புப் பட்டறை உள்ளது. இதனால் ஏற்படும் துகள்களால் அருகில் வசிக்கும் தெய்வசிகாமணி குடும்பத்தினா் நோய்வாய்ப்பட்டு அறுவை சிகிச்சை செய்து கொண்டதாகவும், குடும்ப உறுப்பினா்களுக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுவதாகவும், இரவுநேரம் தூங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறி மரப்பட்டறை உரிமையாளரிடம் முறையிட்டுள்ளனா். இதைத்தொடா்ந்து, ஊராட்சி நிா்வாகம் மற்றும் ஊராட்சி ஒன்றியத்தில் முறையிட்டும் பலனில்லையாம். எனவே, தெய்வசிகாமணியின் குடும்பத்தினா் சாலையோரத்தில் வெயிலில் சமைத்து சாப்பிட்டு தங்களது எதிா்ப்பைத் தெரிவித்தனா்.

அரசு அதிகாரிகளின் கவனத்தைப் பெற கடந்த 2 தினங்களாக போராடி வருவதாக குடும்பத்தினா் தெரிவித்தனா். இது காண்போரைக் கண்கலங்கச் செய்தது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT