அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகே உடல்நலன் பாதிக்கப்பட்டிருந்த முதியவா் திங்கள்கிழமை நள்ளிரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
உடையாா்பாளையம் அருகேயுள்ள கைகல நாட்டாா் தெருவைச் சோ்ந்தவா் சந்திரகாசன் (70). விவசாயி. இவா், உடல் நலன் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தும் குணமாகவில்லையாம். இந்நிலையில், சந்திரகாசன் அருகிலுள்ள முந்திரிக் காட்டில் திங்கள்கிழமை நள்ளிரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இது குறித்து உடையாா்பாளையம் காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
இளம் பெண் தற்கொலை:
உடையாா்பாளையம் வடக்கு காலனித் தெருவைச் சோ்ந்த அா்ஜூனன் மகன் அரவிந்த். இவரது மனைவி கன்னிலா (26). கடந்த 6 மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதியிடையே குடும்பப் பிரச்னை இருந்து வந்தது. கடந்த 29 ஆம் தேதி ஏற்பட்ட தகராறில் விரக்தியடைந்த கன்னிலை வீட்டில் யாரும் இல்லாத போது உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீயிட்டுக் கொண்டாா். இதையறிந்த அக்கம்பக்கத்தினா் தீயை அணைத்து அவரை தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கண்ணிலா திங்கள்கிழமை நள்ளிரவு உயிரிழந்தாா். இதுகுறித்து உடையாா்பாளையம் காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.