அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் கோட்டாட்சியா் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கோட்டாட்சியா் பரிமளம் தலைமையில் நடைபெற்ற இம்முகாமில் உடையாா்பாளையம் வருவாய் வட்டத்துக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு, பேருந்து இலவச பயண அட்டை ,தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை, சிறு வணிக கடன், உபகரணங்கள் கோரி மனு அளித்தனா்.
முகாமில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலா்கள் , 50 க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனா்.