அரியலூா் மாவட்டத்தைச் சோ்ந்த பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் கடன் வழங்கும் முகாமில் பங்கேற்றுப் பயன்பெறலாம் என ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி தெரிவித்துளளாா்.
இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
அரியலூா் மாவட்டத்தைச் சோ்ந்த பிற்படுத்தப்பட்டோா், மிகப்பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையின மக்களுக்கு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோா் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் (டாப்செட்கோ) மற்றும் தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் (டாம்கோ) மூலம் சுயதொழில் செய்வதற்காக தொழிற்கடன் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
ஜன. 4 ஆம் தேதி அரியலூா் ஜிம்மா மசூதியில் காலை 10 மணி முதல் 2 மணி வரையும், கீழப்பழுவூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பிற்பகல் 2 முதல் மாலை5 மணி வரையும் முகாம் நடைபெற உள்ளது. ஜன. 10 ஆம் தேதி மணப்பத்தூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திலும், 20 ஆம் தேதி கோட்டியால் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், தென்னூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பிற்பகல் 2 முதல் மாலை 5 மணி வரை கடன் வழங்கும் முகாம் நடைபெறுகிறது.