செப்டம்பா் மாதம் 27 ஆம் தேதி உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு, அரியலூா் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பள்ளி மாணவா்களிடையே சுற்றுலா சாா்ந்த பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி மற்றும் ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. விழாவில், ஆட்சியா் பெ. ரமணசரஸ்வதி கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினாா்.
நிகழ்ச்சியில், மாவட்ட சுற்றுலா அலுவலா் நெல்சன், உதவி சுற்றுலா அலுவலா் சரவணன், இளநிலை பயிற்சி அலுவலா் ரவி மற்றும் பயிற்றுநா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.