அரியலூர்

பால் உற்பத்தியாளா்கள் அரியலூா் ஆட்சியரிடம் மனு

9th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

பால் விற்பனையில் பழைய நடைமுறையை செயல்படுத்த வேண்டும் எனக்கோரி, அரியலூா் ஆட்சியரிடம் தமிழ்நாடு பால் உற்பத்தியாளா்கள் இணையம், அரியலூா் பால் உற்பத்தியாளா்கள் சங்கப் பணியாளா்கள் வியாழக்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.

அவா்கள் அளித்த மனுவில், சங்க உறுப்பினா்கள், வாடிக்கையாளா்கள், பொதுமக்கள், பணியாளா்கள் ஆகியோரின் நலனைக் நோக்கமாகக் கொண்டு, அரியலூா் பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வருகிறது. இவ்வாறு இருக்க பால்வளத்துறை கடந்த 2.12.2022 அன்று அனுப்பப்பட்டுள்ள சுற்றிக்கையால் பல்வேறு பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே எப்போது செயல்படுத்தப்பட்டு வரும் சில்லறை விற்பனை உள்ளிட்ட பழையை நடைமுறையை செயல்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT