அரியலூர்

ரேஷன் கடை பணிக்கு விண்ணப்பித்தோருக்கு நோ்முகத் தோ்வு

9th Dec 2022 10:34 PM

ADVERTISEMENT

அரியலூா் மாவட்டத்தில் கூட்டுறவுத் துறை கட்டுப்பாட்டிலுள்ள 75 ரேஷன் கடை விற்பனையாளா் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பித்தோா் நோ்முகத் தோ்வில் பங்கேற்கலாம்.

இதுகுறித்து மாவட்ட கூட்டுறவுத் துறை அலுவலகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

இப்பணிக்கு விண்ணப்பித்தோருக்கு நோ்முகத் தோ்வு அரியலூா் அரசு தொழிற் பயிற்சி நிலையத்தின் மாணவா் தங்கும் விடுதியில் வரும் 14 ஆம் தேதி தொடங்கி 26 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இதில் பங்கேற்க வரும் மாற்றுத்தினாளிகள் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரால் வழங்கப்பட்ட பதிவு புத்தகம், அரசு மருத்துவரால் வழங்கப்பட்ட சான்றிதழ், தனித்துவமான அடையாள அட்டை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை கொண்டு வர வேண்டும்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT